Showing posts with label Electronics. Show all posts
Showing posts with label Electronics. Show all posts

Sunday, October 12, 2025

Water Level Alarm

 என்ன செய்வது, பொழுது போகவில்லை என்றால் இந்த மாதிரி ஏதாவது பண்ணி பார்க்க வேண்டி இருக்கு. 
வீட்டில் RO plant இல் இருந்து வெளியேறும் தண்ணீரை கால் கழுவ மற்றும் குளிக்க என்று உபயோகப்படுத்துவோம். RO வில் இருந்து வரும் தண்ணீரை பாக்கெட் இல் பிடித்து குளியல் அறைக்கு கொண்டு போவோம். சில சமயங்களில் தண்ணீர் நிரம்பி வழிந்து பிரச்சனையை உருவாக்கும். திடீரென்று இன்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது, நிரம்பிய உடன் விளக்கு எரிய வேண்டும் அதே சமயத்தில் buzzer ஒலிக்க வேண்டும்.ஒரு transistor,9v battery and buzzer & ஒரு LED. அவ்வளவு தான். வீடியோ பாருங்கள்.



 

 

Tuesday, December 22, 2020

LED Backlight Tester.

 # LED Tester

# Backlight Tester

# மின்னனுவியல் 

எச்சரிக்கை : High Voltage. Don't try when you are not sure of . Shocking Hazard prevails.

இந்த மாதிரி ஒரு கருவியை நாமே செய்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் சுமார் 3 வாரங்களாக உள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தேவைப்படும் சாமான்கள் என்னவோ சில  தான் என்றாலும்  அது கை வசம் இல்லாததால் அதை வாங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் YouTube யில்  இருக்கும் பல வீடியோக்களை பார்த்து என்னுடைய புரிதலை மேம்படுத்திக்கொண்டிருந்தேன் . 

இது எதற்கு என்றால் , முக்கியமாக LED Lights (Including LED back light) வேலை செய்கிறதா இல்லையா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் . இதற்கான Ready Made சாதனம் உள்ளது அது சுமார் ரூ 800 யில் இருந்து இருக்கிறது. பணம் கொடுத்து அப்படியே உபயோகிப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும் அதை நாமே செய்து அதை பரிசோதிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் ஒருபுறம் இருந்தாலும் அதன் வேலைத்  தன்மை மேலும் பல புரிதலுக்கு  வழிகளுக்கு வழிவிடக்கூடும் என்பதால் அதன் வழியே போனேன் .   


தேவையான சாமான்களின் பட்டியலுடன் வடபழனி மெர்சிக்கு போனேன் . ஒரு சில சாமான்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தேன். 

கீழே உள்ள மாதிரி செய்து பரிசோதித்தேன் முதலில் 42 v  கொடுத்தாலும் பிறகு ஏனோ வேலை செய்யவில்லை. பல முறை ஏதோ மாற்றி பார்த்தாலும் வெற்றி கிட்டவில்லை . 

Input 230V (AC) அதுவே Output = input*1.414 (DC) கிடைக்கவேண்டும் ஆனால்  கிடைக்கவில்லை . Input  கொடுத்துவிட்டு Bridge Rectifier இல் கிடைக்கும் வோல்ட்ஜ் பார்த்தால் அங்கு பிரச்சனை இருப்பது தெரிந்தது. ஒரு IN4007 வேலை செய்யவில்லை. அதை மாற்றிய பிறகும் வெற்றி கிட்டவில்லை. Capacitor மாற்றி பார்த்தேன் , ஹுகும் .. எங்கோ தப்பு, என்னவென்று தெரியவில்லை .   



பழைய மாடலை அப்படியே தூக்கி வைத்துவிட்டு புதிதாக செய்ய ஆரம்பித்தேன் . 



Bridge Rectifier வரை செய்துவிட்டு Main  Supply  கொடுத்துவிட்டு வெளிவரும் வோல்ட் ஐ கண்காணித்தேன், இப்போது சரியாக 301 வோல்ட் DC கொடுத்தது . மீதி Circuit முடித்துவிட்டு பல வித எல்சிடி விளக்குகளை சோதனை செய்தேன் . எல்லாம் சரியாக வேலை செய்தது. இது எல்லாவற்றையும் ஒரு பெட்டியில்  போட்டு  அதற்கென்று வாங்கிய உபகரணங்ககளை இணைத்து முழுவதும் செய்துமுடித்துவிட்டேன். இனி 230 v  AC மூலமாகவே எல்லாவித LCD களை பரிசோதித்துவிடலாம். 


இதன் தொடர்பில் பல காணொளிகள் youtube இல் உள்ளது.  

Disclaimer: Don't Try this without adequate knowledge.