Showing posts with label பாட்டு. Show all posts
Showing posts with label பாட்டு. Show all posts

Thursday, December 27, 2007

கண்ணா கருமை நிறக்கண்ணா..

சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டுப்பதிவில் கோவியாரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.அவர் இளவயதில் பாடியதும் அதை விளக்கியதும் அருமையாக இருந்தது.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு கண்ணன் பாட்டு ஞாபகம் வந்தது அது கீழே



ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருந்த போது இன்று யூ டியூபில் கிடைத்த ஒரே பாடல் உங்கள் பார்வைக்காக இங்கு.

என்னை கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள சோகம் அப்படியே என்னை அழுத்திவிடும்.

Monday, October 15, 2007

கேட்கணும் ... பிடிக்கணும்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இணையத்தில் இருந்து எப்படி பாட்டு பிடிக்கனும் என்று சொல்லியிருந்தேன்.அது கொஞ்சம் வன்பொருட்கள் வாங்கி சொருக வேண்டிய விஷுயம்,இப்போ அது கூட தேவையில்லையாம்.

கீழே கொடுத்துள்ள "சுட்டி" யில் சொடுக்கவும்.

"சுட்டி"

இதை ஃபயர்பாக்ஸில் add-on ஆக நிறுவிக்கொள்ளவும்.கீழே உள்ள மாதிரி ஒரு டூல் பார் வந்து விடும்.கேட்கவேண்டிய பாடலை சொடுக்கவும் அப்படியே இந்த டூல் பாரில் உள்ள Record பட்டனை சொடுக்கினால் முடிந்தது.அப்படியே பாட்டை mp3 யாக மாற்றி கொடுத்துவிடுகிறது.


நாட்டுக்கட்டையை பிடிச்சி பார்த்தேன்... நல்லாத்தான் இருக்கு. :-))


Enjoy மக்கள்.

வசந்தம் - நட்சத்திரம்

பட உதவி: வசந்தம் சென்ரல்.

இங்கு சிங்கையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழை கேட்க வேண்டும் என்றால் இந்த சேனைலைத்தான் தேட வேண்டும்.கம்பி வடம் மூலம் சன்/விஜய் தொலக்காட்சிகள் வருகிறது என்றாலும் உள்ளூர் நிகழ்வுகளையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி அவர்கள் நிகழ்ச்சியை படைக்க்கும் ஒரே தொலைக்காட்சி "வசந்தம் சென்ரல்".



வீடு என்னுடையது இல்லை என்றதும் நான் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள் மிகவும் சுருங்கிவிட்டன. செய்திகள் மட்டும் பார்ப்பேன் அதனூடே வரும் விளம்பரங்களில் இந்த வசந்தம் ஸ்டாரின் பாட்டுப்போட்டிகள் பற்றியும் வந்தது.அப்படி வந்த போது இந்த குரல்/வித்தியாசமான தமிழ் பாடும் முகம் கவர்நதது.ஒரே ஒரு தடவை தான் கேட்டேன் அப்படியே அசந்துவிட்டேன்.

நேற்று தான் கடைசி நான்கு பேர்களுக்குள் இடையே நடந்தது.இதைக்கான அமைச்சர் ஈஸ்வரன் வந்திருந்தார். அவர் தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நடுவர்களின் முடிவும் SMS வாக்கும் சேர்ந்து எபி சங்கரா என்பவருக்கு முதல் பரிசை கொடுத்தது.இரண்டாம் நிலையில் வந்தவர் தான் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கபட்டும் SMS முடிவுகள் நிலமையை இவர் பக்கம் சாய்த்துவிட்டது.

அவர் பாடும் ஒரு பாடல் இங்கு கிடைத்தது. பார்த்து மகிழுங்கள்.ஏற்றியவருக்கு மிக்க நன்றி.

பாடல் 1

பாடல் 2

எபி சங்கரா... மனமார வாழ்த்துகிறேன். கூடிய சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.சில வார்த்தைகள் பேசுவதற்குள் திணறிவிடுகிறீர்கள்.

யூ டியூபில் பார்க்கமுடியாதவர்களுக்காக...

Monday, June 25, 2007

சங்கம்

1969ம் ஆண்டு வெளிவந்த இந்த ஹிந்திப்படத்தை 1995யில் தான் அதுவும் மலேசிய தொலைக்காட்சி மூலம் பார்க்க முடிந்தது.அப்படியே ஆளை 3 மணி நேரத்துக்கு கட்டிப்போட வைக்கும் கதை.

அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்...கீழே

மிக பழைய பாடல் என்பதால் என்னவோ முதலில் கொஞ்சம் கர புர என்று கேட்கிறது.

கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Share | Track details