Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Wednesday, January 06, 2010

என்ன,இப்படி சொல்லிட்டாங்களே!!

சும்மா தானே இருக்கோம் இப்போ என்று நான் முன்பு வேலை செய்த பாலத்தின்(மலேசியாவில்) புதிய படம் ஏதாவது இருக்கா என்று கூகிளிடம் தேடிய போது ஒரு அருமையான படம் கிடைத்தது.

இங்கே

படுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா?

இல்லை.

நிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா?

Tuesday, March 04, 2008

Batu Kawa- East Malaysia

இது நாங்கள் கிழக்கு மலேசியாவில் பண்ண ஒரு பால கட்டுமான பணிகளின் படங்களின் தொகுப்பு.

போட்டோ பக்கெட்டில் இந்த வசதியை பார்த்ததும் முயன்று பார்க்கலாமே என்று முயற்சித்ததின் விளைவு.

பார்த்து மகிழுங்கள்.


Wednesday, November 28, 2007

மலேசியா கிருஷ்ணர்

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காதது.

நான் பல தடவை வெளியில் சுற்றும் போது பேருந்து அல்லது ரயிலில் போகும் போது குழந்தகளையே ரசித்து பார்த்துக்கொண்டிருப்பேன். என்னதான் அவர்கள் உலகம் தனி என்றாலும் நம்மையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? என்ற ஆதங்கம் தாம் வரும்.பெரும்பாலான சமயங்களில் நம்மை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்ட சமயங்களில் தூர நின்றுகொண்டு அவர்கள் நடை உடை,சிரிப்பு & அழுகையை ரசித்துக்கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் ரசிக்கும் குழந்தையை இப்படி பார்க்க நேர்ந்தால்.......

கொடுமை தான். இது நடந்தது மலேசியாவாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.



இதை வீடியோ எடுக்க முன்னேற்பாட்டுடன் வந்தார்களா? அல்லது சும்ம்மா எடுத்தார்களா? என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.

Saturday, June 02, 2007

இந்து மதத்துக்கு மாறனுமாம்

இன்று காலை "Today" செய்தித்தாளில் ஒரு செய்தி படித்துப்பருங்கள்.
ஒரு இந்து முஸ்லீமாக மாறி பிறகு இந்துவாக மாற்றிக்கொள்ள படும் அவஸ்தைகளை.இவருடைய கணவன் முதலில் இந்துவாக இருந்து பிறகு இன்னொரு மனைவி வைத்துக்கொள்வதற்காக முஸ்லீமாக மாறியதாக செய்தி சொல்கிறது.
மலேசியா போக வேண்டிய தூரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது.

நன்றி:டுடே
பின் குறிப்பு: நேற்று இதே மாதிரி ஒரு வழக்கில் அவர்கள் இஸ்லாமிக் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு இஸ்லாமிலிருந்து விலகி கிருஸ்துவ மதத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.