Monday, May 22, 2006

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்-3

Principal முன்பு உட்கார்ந்து இருந்த அப்பா நெற்றியில் உள்ள ஸ்ரீசுர்ணத்தைப் பார்திருப்பார்போலும்,

சார்,சில பையன்கள் BE போனாலும் அந்த seat எல்லாம் "Backward"க்கு மாத்திரம் தான் என்றார்.அப்படியெல்லாம் rules இருந்ததா என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

எனது முன்னோர்களின் Actionயின் "Equivalent opposite reaction" இப்போது தெரிந்தது.

(இந்த சமயத்தில் அனாவசியமாக,யாரோ ஒருவர் எழுதிய "IITகளை மூட வேண்டும்"என்ற பதிப்பை பார்க்க நேரிட்டது)
ஆமாம்! உலகம் உட்பட எல்லாமே உருண்டைதான்...செய்த தவறை மீண்டும் மீண்டும் பல மக்கள் வெவ்வெறு விதங்களில் செய்து வருகிறோம்.

இதன் மூலம் எனது Mechanical ஆசை முற்றாக முழுகிப்போனது.

சரி,அடுத்தது என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கு போது இன்னும் 1வார அவகாசம்(decide செய்வதற்கு) இருப்பது நினைவுக்கு வந்தது.

மறுநாள்..சரி "Electrical Engineering" வகுப்பில் உட்கார்ந்து பார்க்கலாம் என்று போய் பாதி நாள் தான் இருந்தேன்.
Volt,Amps & Current என்று கண்ணுக்கு தெரியாத சமாச்சாரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.சுத்தமாக மண்டையில் ஏறவில்லை.காலை பகுதி இப்படி போய்கொண்டுறிக்கும் போதே மாலை பகுதியை எங்கு செலவழிப்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Lunch Time..

Canteen பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கும் போது புதிய நண்பர் கிடைத்தார்.அவர் நிலமை என்னைவிட மோசமில்லை ஏனென்றால் அவர் முதலிலே Decide பண்ணிவிட்டார் தனக்கு Civil தான் என்று.அவரிடம் பேசியபிறகு,சரி மதியம் Civil Classக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.அரை மனதுதான் ஏனென்றால் Civil என்றாலே ஒரு மாதிரியான "Students" என்ற நல்மதிப்பை முன்னால் மாணவர்கள் ஏற்படுத்திவைத்திருந்தார்கள்.

மதியம் Classயில் ஏதோ புரிவது போல தெரிந்தது மற்றும் அந்த நண்பரும் வற்புறுத்தினதால் அங்கேயே தொடரலாம் என்று முடிவுசெய்தேன்.

Futureஐ Decide பண்ணிய விதத்தை பார்த்தீர்களா?? Reservation என்னை பாதி துரத்த மீதி எனக்கு பிடிக்காத Course துரத்த வந்து Civil மடியில் விழுந்தேன்.

Civil Engineering - என்றால் என்ன? இதைப்பற்றி எனக்கு "அ" என்ற அட்சரம் கூடத்தெரியாது.அதற்கு உதாரணம்...

ஒரு நாள் Classயில் பாடம் நடந்துகொண்டு இருக்குபோது சொன்னார் "Building கட்டும்போது கம்பி கட்டுவதை பார்த்திருப்பீர்கள்"என்று,நான் குழப்பிப்போனேன் ஏனென்றால் நான் பார்த்ததேயில்லை.இப்படித்தான் என்னுடைய "Civil Engineering " படிப்பு தொடங்கியது.

2 வருட Diploma, 4 Semesters பலவிதமான பாடங்கள்,கடைசி Semesterயில் Project Work ஒன்று பண்ணவேண்டும்.எங்கள் Groupயில் நாங்கள் ஒரு சின்ன Pavilion கட்டினோம் அது இன்றும் அந்த Play Ground பக்கத்தில் உள்ளது.இதற்கு Design பண்ணியது Mr.Natarajan அப்போதய Head of Civil Department.இவர் தற்போது Principal ஆக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பொருமைசாலி. நல்ல மனிதர்.

வரும் பதிவுகளில் நான் பார்த்த Companyகள்,மற்றும் கட்டுமானத்துறையின் நெளிவு சுளிவுகளை பார்க்கலாம்.

7 comments:

dondu(#11168674346665545885) said...

"எனது முன்னோர்களின் Actionயின் "Equivalent opposite reaction" இப்போது தெரிந்தது."

இந்த மாதிரியான தேவையற்ற குற்றவுணர்ச்சிகளை விலக்குங்கள். நம்மவர்கள் யாரையும் படிக்காதே என்று கையை பிடித்து தடுக்கும் நிலையில் இருந்ததேயில்லை. தடுக்கவும் இல்லை.

பிற்படுத்தப்பட்ட சாதியினர் பலர் செய்யக்கூடாத கொடுமைகளையெல்லாம் தலித்துகளுக்கு செய்து விட்டு தற்சமயம் ரிசர்வேஷனை அனுபவித்து வருகிறார்கள்.

என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்ற பதிவினைப் பாருங்கள். http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vassan said...

வணக்கம்.

புத்தூர் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த காலத்தில் தேசிய மாணவர் படையில் இருந்த போது,கடைசி வருடம் கொள்ளிடம் பாலத்தில் ஆரம்பித்து (தஞ்சை மாவட்ட எல்லை) நாகை வலிவலம் தொ.நு. க க்கு மிதிவண்டி பயணம் சென்று வந்தோம். தேசிகர் தொ.நு.க -ல் இரவு தங்கினோம்.

நான் விருப்பத்துடன் கட்டிடவியல் படித்தவன் :) உங்களை மாதிரியே 11 வருடம் உ.நி.பள்ளி படித்தவன் !

புகுமுக வகுப்பில் 87% வாங்கியதால் அண்ணாமலைக்கு போக முடியவில்லை.

அண்ணாமலையில் பொறியியல் இளங்கலை படிக்க, குறைந்த மதிப்பெண் பெற்றும் ஒதுக்கீடுகளால் சில வகுப்பு நண்பர்களுக்கு இடம் கிடைத்தது,

18 வயதில் எனக்கு இது அநியாயமாகத் தெரிந்தது. சில வருடங்கள் கழித்து அதுவும் பல வருடங்கள் கழிந்த பின், ஒதுக்கீடுகள் தமிழகத்தில் சரியென்றே எனக்குத் தோன்றுகிறது.

நிற்க.

எளிதாக தமிழில் எழுதக்கூடியச் சொற்களை கூட நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது சலிப்பைத் தருகிறது.

நன்றி. வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

எளிதாக தமிழில் எழுதக்கூடியச் சொற்களை கூட நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது சலிப்பைத் தருகிறது."

உங்கள் கருத்துக்கு நன்றி.
முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
நீங்கள் சீர்காழியா?

வடுவூர் குமார் said...

திரு டோண்டு அவர்களே
தவறுகள் திரும்ப திரும்ப இழைக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

நாகை சிவா said...

ஆம், தவறுகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

குழலி / Kuzhali said...

வணக்கம் குமார்,
உங்கள் பதிவு ஒரு ஆட்டோகிராப் மாதிரி நன்றாக உள்ளது.

//சார்,சில பையன்கள் BE போனாலும் அந்த seat எல்லாம் "Backward"க்கு மாத்திரம் தான் என்றார்.அப்படியெல்லாம் rules இருந்ததா என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.
//
பொதுவாக 77-80களில் இரண்டாம் ஆண்டில்தான் துறைகள் அளிப்பார்கள், இரண்டாம் ஆண்டில் அந்த காலக்கட்டத்தில் விட்டுவிட்டு பி.இ. சென்றார்களா? பொதுவாக முதலாண்டு படிக்கும் போதே விட்டு சென்றுவிடுவார்கள் இது எப்படி என புரியவில்லை எனக்கு (நானும் இப்படி பாதியில் பட்டயப்படிப்பை விட்டுவிட்டு பொறியியல் சேர்ந்தவன் தான், ஆனாலும் என் காலகட்டம் வேறு 93-94), மேலும் இந்த துறை பிரிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு, எங்கள் கல்லூரியில் சிவில் பிரிவில் ஒரே ஒரு O.C. மாணவர் கூட நான் படித்த ஆண்டில் படிக்கவில்லை, ஏனெனில் O.C.யில் பி.இ. இடம் கிடைத்தவர்கள் இரண்டாம் ஆண்டு துறை பிரிக்கும் போது (அப்போது முதலாண்டு மதிப்பெண்கள் பார்ப்பதில்லை +2 மதிப்பெண்கள் தான் பார்த்தனர்) B.C.யில் மற்ற துறைகளை எடுத்துக்கொண்டனர், அதனால் O.C.யில் கடைசியாக வந்த மாணவர் கூட சிவிலுக்கு வரவில்லை, இது ஒரு குழப்பமான கணக்கீடு, நான் சொன்னது புரிந்ததோ என்னவோ? முடிந்தால் இது தொடர்பாக நான் படித்த புத்தூர் பாலிடெக்னிக்கிலும் எனது கல்லூரியில் கிடைத்த அனுபவங்களையும் தனிப்பதிவாக இடுகின்றேன் ஆனால் இரண்டிலுமே O.C.யில் கடைசியாக உள்ளே வந்த மாணவர் சிவில் படிக்க தேவையில்லாமலிருந்தது, தற்போது இந்த குழப்பங்கள் எதுவுமில்லை, முதல் ஆண்டிலேயே பிரித்துவிடுகின்றனர்.

//இதன் மூலம் எனது Mechanical ஆசை முற்றாக முழுகிப்போனது.
//
மேலும் இது தொடர்பாக நேசக்குமார் அவர்கள் ஒரு பதிவெழுதியுள்ளார்,( http://tamil.sify.com/art/nesakumar/fullstory.php?id=14214906&page=1 ) ஒரு வேளை அந்த பதிவை படித்தால் இனியும் பாதி ரிசர்வேசன் உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்து என்பதை நீங்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.

நன்றி

வடுவூர் குமார் said...

நன்றி குழலி அவர்களே
கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.
மருபடியும் படித்துப் பார்க்கவேண்டும்.