அலுவலகத்தில் இருந்து சுமார் 35 கி.மீட்டர் (இங்கு இதெல்லாம் ஒரு தூரமா?) கிளம்பினோம்.ஓட்டுனர் பாக்கிஸ்தானி.கிரிக்கெட் முதல் தீவிரவாதம் வரை பேசிக்கொண்டு சென்றோம்.இப்போது நாங்கள் போகும் இடத்திற்கு இதற்கு முன் ஒரே ஒரு தடவை மட்டுமே போயிருப்பதாகவும் எப்படியும் போய்விடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்.பாக்கிஸ்தான் இப்போது இருக்கும் நிலமைக்கு அங்கு தலைவிரித்தாடும் லஞ்சமே காரணம் என்று சொன்னார்.அவர் இருக்கும் வீடு ஒரு அரபிக்கு சொந்தம் என்றும் அறைக்கு வாடகை ஏதும் கொடுக்கவேண்டாம் என்று அவர்கள் சொல்லிவிட்டதாகவும் சொன்னார்.எப்போதாவது அவர்களை வெளியில் அழைத்துக்கொண்டு போவது மற்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கி தங்கும் இட பிரச்சனை வராமல் இருக்கிறார்.
அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமான நிலைய சாலை வழியே போய் நேராக ஒரு பெரிய கோட்டை மாதிரி உள்ள வீடு வரை போய் அங்கிருந்து வளைந்து வளைந்து போய் கொண்டிருந்தார்.அதற்கு முன் தன்னிடம் GPS இருக்கிறது என்றும் அதில் முதல் தடவை போனதும் Favorites இல் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்.இரண்டு பக்கமும் மணம் மேடுகள் அதில் சிலவற்றில் 4 வீல் வாகனங்கள் மணல் மீது ஏறி சாலையில்லாமலே எங்கோ போய்கொண்டிருந்தார்கள்.அவ்வப்போது இப்படி செல்லவேண்டியிருப்பதால் என்னவோ அங்கு பலரிடம் இவ்வகை வாகனங்களை பார்க்கமுடிகிறது.
நான் GPS பார்த்துக்கொண்டு இருக்க ஓட்டுனர் வழியை தவறவிட்டிருந்தார்.நாங்கள் இருக்கும் இடமும் நாங்கள் போகவேண்டிய இடமும் பக்கத்தில் காண்பித்தாலும் மணல் மேடுகள் நாங்கள் போகவேண்டிய இடத்தை சரியாக காட்டவில்லை.சாலைகள் இல்லாத்தால் வழியும் தெரியவில்லை.வண்டியை திரும்பவும் வந்த வழியே கொண்டு போய் சாலை y யாக பிரியும் இடத்தில் மற்றொரு சாலை எடுத்து போனோம். நல்ல வேளை சரியான வழிக்கு வந்து இடத்தை கண்டு பிடித்தோம்.முதலில் அந்த ஓட்டுனர் வந்த போது இருந்த ஒரு வழிகாட்டி பலகை கீழே விழுந்திருந்தால் சரியான பாதையை தவறவிட்டதாக சொன்னார்.
போன இடத்தில் இப்போது தான் வேலைக்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரும் வழியில் ஒரு அராபி மாது வாட்டர் மிலான் விற்றுக்கொண்டிருப்பதை பார்த்து,சுமாரான அளவில் ஒன்று வாங்கிவந்தோம்.
இன்னும் சூரியன் தன் கிரணங்களை மண் மீது காட்டாமல் இருந்ததால் தப்பித்தோம் இல்லாவிட்டால் 10 நிமிடம் கூட நிற்கமுடியாது.
2 comments:
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
வாங்க நம்ம ஆளு.
முதல் போனியே நீங்க தான்.
நடத்துங்க.
Post a Comment