ஓடு,பக்கத்தில் உள்ள நூலகத்துக்கு.
DEV - என்ற பகுதியில் ஒரு 10 புத்தகங்கள் இருந்தது,பல அழுக்காக இருந்தது.பலர் படித்துப்போட்டதால் போலும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பித்தேன்.பல இடங்களில் சிரிப்பை அடக்க படாதபாடு படவேண்டியிருந்ததை சொல்லவும் வேண்டுமா?
இவரின் கதைகளை படிக்கும் போது,எப்படி இவரால் 1957 வருடங்களில் இந்த மாதிரி கதைகளை எழுதமுடிந்தது என்று உள்ளுக்குள்ளே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.இவர் வாழ்ந்ததே வெறும் 44 வருடங்கள் தானாம்.44 யெல்லாம் வயதா?
போன வாரம் படித்த சில நூட்கள்.
இந்த மாதிரியெல்லாம் எழுதினா,அலுவலகத்தில் படிக்கமுடியுமா?
வாங்க இ.கொத்தனார்,உங்களுக்காகவே இந்த பதிவு.உங்களை மாதிரியே இவரும் சந்துல சிந்து பாடியிருக்கார்.:-)))அவர் எழுதிய ஒரு கதை; ஒருவர் தட்டச்சு இயந்திரம் வாங்கி அதன் மூலம் அதன் கஷ்டங்களை சொல்லியிருப்பது,வயிறு வலி இருப்பவர்கள் படிப்பது உசிதம்.
6 comments:
வெல்கம் டு தி தேவன் பேன் க்ளப்!! அவரோட புத்தகங்கள் ஒரு லோட் வருது இந்த மாதக் கடைசியில்!! அப்புறம் சிரிப்போ சிரிப்புதான்!!
அந்தக் காலத்து கல்கியில் இவரைப் பார்த்த ஞாபகம். சித்தரக் கதைகளோடு!
ஒரு லோடு வருதா!!இ.கொத்தனார்.
படித்துவிட்டு போடுங்க உங்களுக்கு பிடித்ததை.
வாங்க ஜிவா,இவருடைய புத்தகங்கள் எனக்கு ஒரு வருடமாகத்தான் பரிச்சயம்.ஒருவேளை பெயர் ஞாபகம் இல்லாமல் படித்து சிரித்திருக்ககூடும்- இளவயதில்.
நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர் தேவன் அவர்கள்.
வாங்க தமிழ்நெஞ்சம்,
இப்படி ஒரு எழுத்தாளர் 1950 களில்!! ஆனால் இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கு.
Post a Comment