மாமண்டூரை தாண்டியதும் வலது பக்கத்தில் போக ஒரு அறிவிப்பு பலகை இருக்கும்,அவ்வழியே போனால் உத்திரமேரூரை அடையலாம்.
சரியான அறிவிப்பு பலகை இல்லாததால் பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே இவ்விடம் இருந்தாலும் மகிழுந்து ஓட்டும் போது சாலையிலேயே கவனம் இருப்பதாலும் கவனிக்க முடியாமல் நேரே இருக்கும் சுந்தர வரதராஜ கோவிலுக்கு போய் அருகில் இருக்கும் இடத்தில் மகிழுந்துவை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்பட்வர்களை கேட்டு இந்த கோவிலுக்கு வந்தோம்.சிறிய கோவில் சுற்றி உள்ள கற்களில் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்கள் அங்கங்கே தெலுங்கு எழுத்துக்களையும் காணமுடிந்தது.பழைய தமிழுக்கு இக்கால தமிழ் மொழியாக்கத்தை வாசலில் போட்டிருக்கும் பலகையில் போட்டிருந்தார்கள். நாங்கள் போன நேரம் இளம் மாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை.
பழைய தமிழை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சுந்தரவதனராஜ கோவிலுக்கு போனோம்.இக்கோவிலை பார்த்து தான் பெஸன்ட் நகரில் இருக்கும் அஸ்டலக்ஷ்மி கோவிலை கட்டினார்களாம்.எப்போதோ ஒரு முறை அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிருந்ததால் அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை.
கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.
ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.
கோபுர அழகு.
4 comments:
அருமையான இடமா இருக்கே! இன்னும் நமக்குப் போக நேரம் வரலை.
அதென்ன வழக்கத்துக்கு மாறா சில தட்டச்சுப் பிழைகள்? அவசரமா போஸ்ட் செஞ்சீங்களா?
சுந்தரவதனராஜ ( இதுவும் நல்லாத்தான் இருக்கு! பெருமாளின் முகம் அழகுதானே?)
மட்டுக்கொட்டகை.............. கால் உடைஞ்ச மாடு?
நிறைய பிழைகள்...எப்படி பார்க்காமல் விட்டேன்?
லினக்ஸில் இருக்கும் போது ஐபஸ் மூலம் தட்டச்சு செய்தேன், சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
thanks.25.2.2012.we r go to this place.s.d.n.b.v.c
Enjoy meens
Post a Comment