ஒரு வழியாக சாலையை கடந்து வந்து உள் நுழையும் வழியை தேடிக்கொண்டு ஒவ்வொரு இடமாக போய்கொண்டிருந்தேன்.

உள் நுழையும் வழி சரியாக இல்லாத்தால் அங்குள்ள காவலாளியிடம் கேட்டு மகிழுந்து போகும் பாதையிலேயே போய் கடைத்தொகுதி உள் போகும் வழியை அடைந்தேன்.இங்கும் சில கடைகள் மூடப்பட்டிருந்தனவா அல்லது மேம்பாட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தனவா என்று சரியாக தெரியவில்லை.
உள்ளே நுழைந்ததும் அன்னாந்து பார்க்க வைத்தது அதன் கூரை அமைப்பு தான்.முழுவதும் கண்ணாடி அமைத்து வெளி வெளிச்சம் முழுவதுமாக தொகுதிக்குள் வரும்படி அமைத்திருக்கிறார்கள்.

தரையின் பள பளப்பு மற்றும் உள் அலங்காரங்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் துபாய் மால் போலவே இருப்பது போல் இருக்கிறது.உலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பல நிறுவனங்களின் பெயர்கள் கண்ணில்பட்டது ஆனால் வருகையாளர்களின் கூட்டம் தான் அவ்வளவாக இல்லாதது போல் தோன்றியது.
Ski Bubai என்று அழைக்கப்படும் பனி சறுக்கு அரங்கம் தான் இதன் முக்கியமான இடம்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் பல விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.கட்டணமும் அதற்கு தகுந்தாற் போல் இருந்தது.பெரியவர்களுக்கு ஆரம்ப கட்டணம் 80 திராம் மற்றும் குழந்தைகளுக்கு 45 திராம்.மற்ற கட்டணங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

கொடுக்கும் கட்டணம் 2 மணி நேரத்துக்கு என்று நினைக்கிறேன்.கட்டணத்துக்கு வெளி ஆடையும் காலணியும் கொடுக்கிறார்கள்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கும் விதம் பல விதமான விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.மேலும் சில படங்கள் அதன் தொடர்பில்.



இனி வருபவை கட்டிடக்கலையின் கை வண்ணங்கள்.விளக்குகளை தக்க இடத்தில் வைத்து இன்னும் மெருகேற்றியிருக்கிறார்கள்.






சுமார் 2.30 மணி நேரம் சுற்றிய பிறகு வந்த வழியாகவே ஜாக்கிரதையாக சாலையை கடந்து பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்தேன்.