15ம் தேதி ஏப்ரல் டைகர் விமானச்சேவை மூலம் சிங்கையில் இருந்து புறப்பட்டேன் சென்னைக்கு.கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பே எடுத்துவிட்டார்கள்.விமானம் முழுவதுமாக நிரம்பவில்லை.இது விழாக்காலம் அல்லது பள்ளி விடுமுறை காலம் இல்லை என்பதால் கூட்டம் நிரம்பி வழியவில்லை போலும்.
ஒவ்வொருவருக்கும் 15 கிலோ எடை என்பதால் வெகு சிலரே அதனை தாண்டி அங்கிருந்தவர்களுடன் பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.என்னுடைய போட்டிகளை டேக் போட்டவுடன் பக்கத்தில் உள்ள கன்வேயர் மூலம் நாமே அனுப்பிவைக்கவேண்டும் அதற்கு ஏதுவாக காலால் அழுத்தி அந்த கன்வேயரை இயக்கும்படி வைத்திருந்தார்கள்.
விமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியிருந்ததால சென்னைக்கு உரிய நேரத்துக்கு 15 நிமிடம் முன்பே தரையிரங்கியது.
இந்திய ரூபாய் இல்லாததால் விமான நிலையத்தில் இருக்கும் பண மாற்று நிலையத்தில் மாற்றி வைத்துக்கொண்டேன்.இங்கு மாற்றுவிகிதம் மிக மிக குறைவு அதனால் தேவைக்கு அதிகமாக இங்கு
மாற்றாமல் இருப்பதே நலம்.
As usual... நான் வருவது யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாததால் அங்கிருக்கும் கட்டண ஊர்திக்கு முன்பதிவு செய்துகொண்டேன்.
குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து சென்னையின் அழகை ரசித்துக்கொண்டு வரும் போது திடிரென்று வண்டி ஒரு மேம்பாலத்தின் மீது போனது. ஒவ்வொரு லேன் மார்க்கிங்க்கும் சிகப்பு ஒளி உமிழ்வான் பதித்து அட்டகாசமாக இருந்தது.சாலையின் பக்க தடுப்புச்சுவரில் சுழலும் சிகப்பு ஒளிஉமிழ்வான்களை பயன்படுத்தியிருந்தார்கள்.கையில் உடனடியாக கேமிரா இல்லாத்தால் படம் எடுக்கமுடியவில்லை.பிறகு தான் புரிந்தது அது சமீபத்தில் திறந்த "
கத்திப்பாரா" மேம்பாலம் என்று.
இப்படி பார்த்துக்கொண்டு வரும் போதே ஏதோ ஒன்று சரியில்லாததை உள்ளுணர்வு உணர்த்தியை என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கும் போதே சடாரென்று புரிந்தது.
அது என்ன?
கீழே உள்ள படத்தை பாருங்கள்.இது சிங்கப்பூரின் விரைவுச்சாலையில் ஒரு பகுதி.

இதில் முக்கியமான ஒரு பகுதி... சாலையில் இரு பக்கங்களிலும் இருக்கும்
"தோள்" என்ற Shoulder பகுதியாகும்.இதை அவசரகாலத்திலும் மற்றும் வாகனங்களை பழுதுபார்பதற்காகவும் தேவைப்படும் பகுதி அது.சாதாரண போக்குவரத்து நேரங்களில் இதை உபயோகப்படுத்துவது குற்றமாகும்.
சரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.
அப்போது எடுத்த சில படங்கள் கீழே....
பாருங்கள் அந்த
"தோள்" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்!!ஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.
பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த
குத்தகைக்கு தயாராக இருக்கவும்.
இது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.

தோள் எங்கே????
கீழே உள்ள படங்கள் கிண்டி பக்கம் வரவிருக்கும் மேம்பால இணைப்புகள்..


கைப்பிடி பகுதியில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பாருங்கள். கீழே ஏதோ பற்றவைப்பு வேலைகள் நடைபெருகின்றன போலும்...
கீழே உள்ள படம்,விமான நிலயைத்தை நோக்கி உள்ள சாலை மற்ற சாலையுடன் இணையும் இடம். அம்புக்குறி மற்றும் அறிவிப்பு விளக்குகள் இல்லாவிட்டால் விபத்து நடக்க மிகச்சிறந்த இடமாக ஆகக்கூடிய வாய்ப்புள்ளது.

இதைப்போல் வழித்தடங்களுக்கு மத்தியில் தேவையான தடுப்பு வேலிகள் இருக்க வேண்டும்,அதுவும் இங்கு இல்லை.தறிகெட்டு ஓடும் வாகனங்கள் எதிர் திசையில் செல்லாமல் தடுக்கவும் இது உதவும்.
இன்றைய செய்தியில் மேலும் சில பால வேலைகள் முடியும் நாட்களை கொடுத்துள்ளார்கள்,அப்படியே இந்த மாதிரி விஷயங்களையும் பார்த்து கவனத்தில் கொண்டால் நல்லது.
லக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.