மிகப்பெரிய ஏமாற்றுத்துடன் வேறு ஊர்கள் பக்கம் போகவேண்டியிருந்தது ஏனென்றால் நாகை படங்கள் அப்போது சரியாக ரெண்டர் பண்ணவில்லை.
இன்று கூகிள் எர்த் போய் ஏதாவது அப்டேட் இருக்கா என்று பார்த்த போது,ஏதோ 4.1 வெர்சன் உள்ளது என்றது.பக்கதிலேயே சுட்டியும் கொடுத்து இருந்ததால்,தரவிரக்கம் செய்து நிறுவிய முடிந்த போது பிழை செய்தியுடன் நின்று போனது மற்றும் டெஸ்க் டாப்பிலும் ஐகானை காணவில்லை.சரி என்று கணினியை ரீஸ்டார்ட் செய்து தரவிரக்கம் செய்ததை நிறுவினேன்.
அப்பாடி!பிழைச்செய்தி ஏதும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது.மறுபடியும் நாகைக்கு போனேன்.
வாவ்!!இப்போது அட்டகாசமாக தெரிகிறது.படங்கள் உங்கள் பார்வைக்கு.
நாகையின் அடையாளம் சரியாக தெரியாத்தால் நாகூர் போய் அங்கிருந்து வந்தேன்.
படங்களை பெரிதாக்கிப்பார்க்க அதன் மீது சொடுக்கவும்.
நாகூர் ரயில் நிலையமும்,தர்காவும்.

அப்படியே ரயில்வே லயனை பிடித்துக்கொண்டு நாகப்பட்டினம் புகைவண்டி நிலையத்துக்கு..

இது நாகையின் பொதுவான படம்.

அதற்கு முன்னாடி நான் படித்து முடித்த வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்.

இது தாங்க நாங்க விழுந்து புரண்ட மண். பெருமாள் கோவில் மடவிளாகம்.நாகை சிவா வீடு எது என்று தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.

கடற்கரையும்& கலங்கரை விளக்கமும்.

இது திரையரங்குகள்.

ஒரு காலத்தில் அவுரித்திடலாக இருந்து இப்போது பேருந்து நிலையமாக மாற்றப்பட்ட இடம்.

சீக்கிரம் போய் புதுப்பதிவு கூகிள் எர்த்தை நிறுவுங்கள்,உங்கள் ஊரையும் பாருங்கள்.
7 comments:
ஆகா... ஆகா.....
படங்களை இன்னும் பெரிது பண்ணி பார்க்கவில்லை....
பார்த்து விட்டு... வரேன்.. விரிவாக பதில் போடுகிறேன்.
சரி வீட்டுக்கு போய் எங்க ஊரு வந்திருக்கான்னு பார்க்கனும் . . . . . .
ஹ ஹா!!
ஒரே மலரும் நினைவுகளா போயிருச்சா??
நான் கூட வீட்டு ஞாபகம் வந்த கூகிள் எர்த்ல மெட்ராஸ போய் பார்த்துட்டு இருப்பேன்!! :-)
எங்க ஊரை பற்றியும் பார்க்க வேண்டும்.
வாங்க சிவா,வெங்கட்ராமன்,CVR & விழியன்.
சீக்கிரம் போய் பாருங்கள்.
பொழுது போக இப்படி பார்க்க பிடிக்கும்.
இன்று இத்தாலி பக்கம் போய் பார்த்தால் 90% வீடுகளில் நம் கிராமத்தில் இருக்கிற மாதிரி மித்தம் வைத்து கட்டி இருக்கிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை.வெளிச்சம் வீட்டுக்கு உள் வரவேண்டும் என்ற எண்ணத்தினால் இருக்கும்.
எங்க ஊரும் தெரியும் இல்லையா? இந்தியா வந்ததும் பார்க்கணும். :(
வாங்க கீதா சாம்பசிவம்
தெரியும் என்று நினைக்கிறேன்.முயலுங்கள்.
Post a Comment