ஆதாவது இது நாள் வரை சிங்கப்பூருக்கு வேண்டிய மணல் தேவையை பெரும் பகுதியை இந்தோனேஷியா பூர்த்திசெய்தது.ஆனால் தற்போது அங்கு நிலமை கையை மீறிப்போய் அவர்கள் நிலவளங்களில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததால்,அரசாங்கம் மணல் ஏற்று மதிக்கு தடைவிதித்துள்ளது.
1997வில் மலேசியா மணல் ஏற்றுமதியை தடுத்தது,இப்போது இந்தோனஷியா.
இந்த தடை சிங்கப்பூருக்கு மட்டும் அல்ல.பெரும் பகுதி இங்கு வருவதால் இந்த தடை நாளிதழில் கட்டம் போட்டு காட்டக்கூடிய அளவுக்கு போய்விட்டது.
கீழே பார்க்க..

நன்றி: தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்
ஆமாம் இந்த சட்டம் எப்படி திடிரென்று வந்தது?இதற்கு முன்பே இதைப்பற்றி முடிவு செய்து இன்று அமல் செய்தார்களா? என்று தெரியவில்லை.மேலும் தேடிய போது வரும் 23ம் தேதிக்கு பிறகு மணல் வராது என்று தெரிகிறது.
நேற்று எனது ஹாட் மெயிலுக்கு ஒருவர் மெயில் கொடுத்து இந்தப்பற்றி கேட்டிருந்தார்.இதனால் சிங்கப்பூரில் எவ்வளவு பாதிப்பு இருக்கும்?இதைப்பற்றி கூட உங்கள் வலைப்பூவில் எழுதலாமே? என்று.
அவருக்கு பதில் அளித்துவிட்டு,சரி நம் மக்களுக்கு கட்டுமானத்துறையில் இப்படியும் ஒரு நிகழ்வு அதன் விளைவைப்பற்றியும் தெரிவித்துவிடலாம் என்ற நோக்கத்துடன் இந்த பதிவு.இவை அனைத்தும் என்னறிவுக்கு எட்டியமட்டும்.
ஒரு முன்னோட்டம்.
கட்டுமானத்துறைக்கு சிமின்ட் எவ்வளவு முக்கியமோ அது போல் மணலும்.கான்கிரீட் இல்லாமல் கட்டுமானம் இல்லை.
இப்படி ஒரு முக்கியமான பொருள் கட்டுமானத்துறைக்கு கிடைப்பதில் பிரச்சனை என்றால் என்ன செய்யவேண்டும் சில அமைச்சர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள்.இங்கு மண் லாரிம் இல்லை மணல் உள்ள நதியும் இல்லை.அதனால் நம்மூரில் தோண்டுவது போல் தோண்டமுடியாது.
"இந்த சூழ்நிலையில் கட்டிடங்களில் என்கெங்கு கான்கிரீட்டை போட வேண்டாமோ அங்கே ஸ்டீல் பொருளை உபயோகிக்க வேண்டும்" என்று ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
இந்தமாதிரி ஆலோசனை அப்படியே எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது.
உதாரணத்துக்கு,மாடிப்படிகளை இரும்பில் செய்வது.
ஒரு கட்டிடம் எழும்பும் போது நல்ல கட்டுமான அதிகாரியாக இருந்தால்,முதலில் மாடிப்படிகளை கட்டும் பணியை துரிதப்படுத்துவார்,எதெற்கென்றால் ஊழியர்கள் பணியிடத்துக்கு ஏறி இறங்க மற்றும் சிறிய பொருட்களை எடுத்து செல்ல இது ஒரு பாதுகாப்பான முறை.அப்படியே வேலையும் முடிந்த மாதிரி இருக்கும்.
கான்கிரீட்டுக்கு பதில் இரும்பில் போடுகிறோம் என்றால் பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் போதே மேலே இருந்து விழும் சின்னச்சின்ன பொருட்கள் மற்றும் சிதறும் கான்கிரீட்களால் அந்த மாடிப்படியை நிரந்தரமாக வைத்திருக்கமுடியாது.ஒரு மாடிப்படிகாக 2 மாடிப்படிகள் செய்யவேண்டிவரும்.
மற்றும் துருபிடித்தல்,பெயிண்ட் அடித்தல் போன்ற மராமத்து வேலைகலை அடிக்கடி செய்யவேண்டி வரும்.
அடுத்து தூண் மற்றும் சிலாப்..
மேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட மாதிரி 80%~100% சேமிக்க முடியும் என்கிறார்கள்.அவர்களுக்கு எப்படி இந்த விபரம் கிடைத்தது என்று தெரியவில்லை.தூண் தான் இரும்பு அதன் உள்ளே கான்கிரீட்.அதை மறந்துவிட்டார்கள் போலும்.
சிலாப்.. படத்தில் காட்டிய மாதிரி ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம்,ஆனால் தேவையில்லாமல் செப்டம்பர் 11 ஞாபகம் வருகிறது.பாதுகாப்பு பிரச்சனை இங்குள்ளது.
கைப்பிடிச்சுவர்: இதில் கான்கிரீட் அளவு குறைவு அதனால் மணல் சேமிப்பும் குறைவு.இரும்புக்கு மாறினால் மராமத்து வேலைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் துருபிடித்த இரும்பு மேலும் தலைவலியை கொடுக்கக்கூடும்.
செங்கல்சுவர்: இதிலும் மணல் உபயோகம் குறைவு.இதிலும் மிச்சப்பிடிக்க வேண்டுமெனில் அவர்கள் சொன்ன வழியை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த பிரச்சனை வரும் வரை மணல் விலை $20/டன் விற்றுக்கொண்டிருந்தது அது இப்போது $50/டன் வரைப்போகும் என்று தெரிகிறது என்ற ஊகங்கள் நாளிதழ்களில் வரத்தொடங்கிவிட்டது.இதனால் கட்டுமானத்துறையில் உள்ளவர்களின் செலவு ஏறும்.வீடு விற்க்கும் விலையும் ஏற வாய்ப்புள்ளது.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்பு இப்போது தான் கட்டுமானத்துறை எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளது,இந்த சமயத்தில் இப்படி பட்ட பிரச்சனையை மிக ஆழமாக கையாளுகிறது இங்குள்ள அரசாங்கம்.
"கான்கிரீட்டுக்கு பதில் இரும்பு" ஓரளவே எடுபடும்.
இப்போது தெரிகிறதா இதன் வீரியம்?அதனால் தான் நாளிதழ்களில் கட்டம் கட்டி சொல்கிறார்கள்.
பார்ப்போம் எப்படி சமாளிக்கிறார்கள் என்று.