நேற்று வெள்ளிக்கிழமை - பொது விடுமுறை என்றாலும் எழுந்து குளித்துவிட்டு ஒரு ஓவல்டின் குடிக்கலாம் என்று பார்த்தால் பால் பாக்கெட் இல்லை,சரி விடு என்று பேப்பரை மட்டும் படித்துவிட்டு வெளியில் கிளம்பினேன்.
நேராக கிரிக்கெட் விளையாடும் இடத்துக்கு போனேன்.இரண்டு குழுவினர் மட்டும் விளையாடிக்கொண்டிருந்தனர் அதில் ஒரு குழு மும்மரவாகவும் அடுத்தது இருப்பதை வைத்து ஏதோபொழுது போக்குவோம் என்ற நிலையிலும் விளையாடிக்கொண்டிருந்தனர் .இரண்டாவது குழுவினர் ஒரு ஆட்டம் முடிந்தவுடன் "நான் பௌலிங் போட்டு பார்க்கவா?" என்று கேட்டேன்.சரி என்ற அனுமதிக்கு பிறகு அந்த டென்னிஸ் பந்தை பௌல் செய்தேன்.பல வருடங்களுக்கு பிறகு செய்வதால் ஒரு சில பந்துகள் எங்கெங்கோ போனது.சுமார் 10.30 மணி வரை விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
12 மணி வரை மடிக்கணினியில் திரு சுகி சிவமின் சிங்கப்பூர் உரையாடல் (2002 வருடம்)
இங்கு கிடைத்தது.முதல் பாகம் முழுவதும் இறங்காவிட்டாலும் ஓரளவு பார்க்கமுடிந்தது.இரண்டு பாகங்களையும் பார்த்துமுடித்தேன்.அருமையாக இருந்தது.சண்டை போடும் தம்பதிகளுக்கு செம சூடு வைத்துள்ளார்.
மதிய சாப்பாட்டுக்குப் பிறகும் மடிக்கணினியில் சில ஆடியோக்களை கேட்ட பிறகு சுமார் 3 மணிக்கு துபாய் மாலுக்கு போய்வரலாம் என்று கிளம்பினேன்.இங்கு போக நான் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ நடந்து போய் பேருந்து எடுக்கவேண்டும். 30 நிமிடங்களுக்கு மேல் நின்ற பிறகு பேருந்து வந்தது.இருக்கும் இடம் தெரியாத்தால் ஒரு தமிழ் பேசும் அன்பரிடம் கேட்ட போது கடைசி நிறுத்தம் அது தான்,நானும் அங்கு தான் போகிறேன் என்றார்.அப்பாடி என்று இருந்தது.வழி நெடுக பல கட்டிடங்கள் வேலை நடக்கிறதா இல்லையா என்பது போல் இருந்தது.இன்று விடுமுறை என்பதால் வேலை கிடையாது போலிருக்கு.வேறு ஒருவரிடம் கேட்டு சரியான நிறுத்ததில் இறங்கினேன்.வலது பக்கம் உலகத்தில் அதி உயர கட்டிடம் புர்ஸ் துபாயும் இடது பக்கத்தில் பிரமாண்டமான இந்த கட்டிடமும் இருந்தது.


நடப்பவர்களுக்கு இன்னும் சரியான பாதை அமைக்கப்படாததால் ஒரு சிறிய பாதை மற்றும் மகிழுந்து ஏறும் பகுதியில் இருக்கும் 1 அடி பாதையை உபயோகித்து போனேன்.
முதலில் நுழையும் போதே கோல் ஜோக் தான்,பல விதமான நகைகள்,கடைகள் என்று ஜொலிக்க வைத்துள்ளார்கள்.இது போதாது என்று இன்னும் பல கடைகள் வரப்போவதை முன்னிட்டு அங்கங்கு மறைப்பு வைத்துள்ளார்கள்.நடக்கும் இடம் அது இது என்று இழைத்துவைத்துள்ளார்கள்.மேலும் சில படங்கள் கீழே...
முதலில் கோல்ட் ஷோக்

கீழுள்ள படத்தில் உள்ள டூமின் வண்ணம் மாறிக்கொண்டே இருப்பது பார்க்க அழகாக இருக்கும்.இவ்வளவு துல்லியமாக பூச்சில் செய்ய செய்ய முடியாது என்பதால் அதை உற்றுப்பார்த்த போது நான் நினைத்த மாதிரி அது சிறிய சிறிய தகடுகள் கொண்டு செய்து ஒட்டவைத்திருப்பது தெரிந்தது,இருந்தாலும் நல்ல கைவண்ணம்.


கலைத்திறனுக்கு ஒரு சாட்சி.

இப்படி பல மில்லியன் கணக்கில் போட்டு திறந்திருந்தாலும் விடுமுறை நாளில் நகை கடைகளில் (40 கடை இருக்கும் என்று நினைக்கிறேன்) வெறும் 3 வரை மட்டுமே காணமுடிந்தது.கடைகாரர்களே உள்ளே உட்காரப்பிடிக்காமல் வெளியில் நின்றுகொண்டிருந்தனர் போலும்.
உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சியும் அதில் மனிதர்கள் குதிப்பது போல் உள்ள அலங்காரமும்

மிகப்பெரிய திரையில் UAE யின் பிரதம மந்திரி பார்த்துக்கொண்டிருக்க, பனி சறுக்கும் கும்பல்.இதற்கு நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 50 திர்ஹாம்.

கட்டிடத்தின் உள் அழகு கீழே உள்ள படங்களில்


இங்கு மற்றொரு அம்சமான இடம் என்றால் அது தான் மீன் காட்சிச்சாலை.சுமார் 6
மீட்டர் உயரத்துக்கு கண்ணாடியில் சுவர் எழுப்பி அதனுள் சகலவிதமான மீன்களையும் விட்டு வித்தை காண்பிக்கிறார்கள்.சுறா,துருக்கை மற்றும் கலர் கலராக.. மீன்களை விட்டுள்ளார்கள்.இந்த காட்சியை சிங்கையில் உள்ள மாதிரி தலைக்கு மேல் பார்க்க தனிக்கட்டணமாக கொடுத்து ஒரு குகையின் உள்ளே சென்று பார்க்கும் படியாகவைத்துள்ளார்கள்.

கீழே உள்ள படம் தரையின் கீழே இந்த மாதிரி விளக்குகளை வைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

வித்தியாசமான யோஜனைகளை கொண்டு ஒவ்வொரு கடையும் பள பளக்குகின்றன.அதுக்கு ஒரு சாம்பிள் கீழே.

மொத்த கடைத்தொகுதியை சுற்றிச் சுற்ற ஒரு 5 கி.மீ தூரமாவது நடந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.கணினி மற்றும் எலக்ரானிக்ஸ் கடைகளில் ஓரளவு கூட்டம் தென்படுகிறது மற்ற கடைகளில் ,பாவமாக இருக்கு.பொது வேலை நாட்களில் வியாபாரம் இதைவிட குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இரவு 7.50 க்கு வெளியில் வந்து அதே பேருந்தை பிடிக்க நிறுத்தத்துக்கு நடந்தேன்.காத்திருப்பு தொடர்ந்தது.1 மணி நேரத்துக்கு பிறகு தடம் எண் 27 வந்தது.எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது Clock Tower வரை அதற்குப் பிறகு பேருந்து நான் நினைத்துக்கொண்டிருக்கும் வழியே செல்லாமல் வேறு வழியே வெகு தூரம் வந்துவிட்டேன்.வேறென்ன செய்ய தலையில் அடித்துக்கொண்டு நடந்து முத்தினா சாலையில் உள்ள சரவணபவணுகு வந்து ஒரு தோசை+சாம்பார் வடை சாப்பிட்டு 14 திர்ஹாம் பில்லை கொடுத்துவிட்டு வீடு வந்து சேரும் போது இரவு 10.40.
படங்கள் செல்பேசி மூலம் எடுத்தது அதனால் தரம் குறைவாகவே இருக்கும்.