அடுத்தக் கடை:
சரவணா ஸ்டோர்சென்னை வந்துவிட்டு ரெங்கநாதன் தெருவை மிதிக்காவிட்டால் எப்படி?
மதிய நேரமானதால் மக்கள் கூட்டம் சிறிது மந்தமாக இருந்ததாலும் “சரவணா ஸ்டோர்ஸ்” கடைக்கு முன் சுலபமாக போக முடிந்தது.வாசலிலேயே வெளியில் வாங்கிய பொருட்களை அவர்கள் ஒரு நெகிழிப்பையில் போட்டு வாயை மூடி கொடுக்கிறார்கள்
திரும்ப மின்தூக்கி..
ஆனால் இந்த முறை 5 வது மாடி
கண்டெயின்ர் நடுவே நடந்தால் எப்படியிருக்கும் அப்படி இருந்தது இந்த இடத்தில்.ஆதாவது டிவி,பிரிட்ச் மற்றும் வாஷிங் மிசின் பெட்டிகள் கிட்டத்தட்ட 2 ஆள் உயரத்துக்கு அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.
நுழைந்தவுடனே கடைச்சிப்பந்தி ஒருவர் வந்து “சார் என்ன பாக்கிரீங்க?” என்றார்.
வாஷிங் மிசினா? LG,Samsung மற்றும் whirlpool இருக்கிறது என்றார்.

என்ன கலர் இருக்கிறது?
ஒரே கலர் தான் உள்ளது (half white)
இது ஏன் என்று தெரியவில்லை. நம்மாளுங்க என்ன கலர் குறைபாடுள்ளவர்களா என்ன?
சரி 6kg உள்ள மிஷினை திறந்து காட்ட முடியுமா?
(எல்லா மிஷின்களும் அட்டை பெட்டியுடன் பத்திரமாக மூடப்பட்டிருந்தன)Display set கூட வைக்கவில்லை.
அப்படியில்லை சார்.உங்களுக்கு வேனா catalogue காட்டுகிறேன்.
என்னப்பா இது!
மாட்டை தண்ணியில் போட்டு விலை பேசுவது மாதிரி?? என்று சொல்லிவிட்டு ஏமாற்றத்துடன் அடுத்த கடையை தேடினோம்.
அங்கிருந்து மாடிப்படியில் கீழே இறங்கும் போது கடை ஒலிப்பானில் இருந்து ஒரு அறிவிப்பு
“
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சேவை செய்யும் ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்” :-))
மனைவி தேர்ந்தெடுத்த அடுத்த இடம்
வசந்த் அன்டு கோ- T.Nagar பஸ் நிலையம் அருகில் உள்ளது.
உள்ளே போனதுமே திரு ஆனந்த் எங்களை அழைத்து என்ன பார்க்க வேண்டும் என்றார்.
தேவையை சொன்னதும்.4 அல்லது 5 மிஷின்கள் உள்ள ஒரு சிறிய இடத்துக்கு கூட்டிப்போய் எங்கள் தேவைக்கு ஏற்ற மிஷினை காண்பித்து அதில் உள்ள சாதக பாதகங்களை கூறினார்.
அவரிடம் இருந்ததும் ஒரே ஒரு கலர் தான்.ஏன் என்று கேட்டத்திற்கு மற்ற கலர்கள் விலைகள் ரூபாய் 15000 மேல் போகும் என்றார்.இந்த பதில் பல கடைகளில் கிடைக்கவில்லை.ஆதாவது பல கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரு வட்டத்துக்குள் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.
நாங்கள் பார்த்த ஒரு இயந்திரம் தற்போது இருப்பில் இல்லாததல் நாங்கள் முதலில் ரூபாய் 1000 கட்டினால் வரும் திங்களன்று வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
6kg கொள்ளலவு கொண்ட இயந்திரம் Automatic சுமார் 11800 வரை வரும் என்றார்.
நாங்கள் பார்த்த 3 கடைகளில் கடைசியாக போன
வசந்த் அன்ட் கோ தான் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சாதக பாதகங்களை கூறி கவர்கிறார்கள்.ஆனாலும் இடம் சின்னதாக இருப்பதால் பல மாடல்களை பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
மொத்ததில் பார்கையில்
சிறந்த Display கிடையாது
வாடிக்கையாளர்களை கவர சரியான அனுகுமுறை கிடையாது. கலர் option இல்லை.
விலை-கிட்டத்தட்ட
சிங்கப்பூரில் விற்க்கும் விலைக்கு ஈடாக உள்ளது.
சர்வீஸ்:மிகப்பெரிய மாற்றம் வேண்டும்.
இது அத்தனையும் ஏன் சொல்கிறேன் என்றால்..
சிங்கையில் இருந்து சென்னை வரும் போது ஓரு 19” LCD மானிட்டர், நண்பர் ஒருவருக்காக வாங்கி வந்தேன்.இது இத்தனைக்கும் சிங்கப்பூரில் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய உத்திரவாதத்துடன் கூடியது.வாங்குவதற்கு முன்பே அந்த நண்பரிடம் இதை விளக்கிவிட்டேன்.
அவர் சொன்ன பதில் இது தான்
“ நான் இங்கு வாங்கினால் சரியான சர்வீஸ் கிடைக்காது,பொருளும் அவ்வளவு தரத்துடன் இருக்காது மற்றும் ஒரு வருட காலம் என்பது மானிட்டரை பொருத்த வரை குறைந்த கால அளவு.சிங்கப்பூருக்காக தயாரிப்பதால் ஒரளவு தரக்கட்டுப்பாடு இருக்கும்,அதனால் அங்கிருந்து வாங்கி வருவதையே விரும்புகிறேன்” என்றார்.
சரி நாம் தயாரிக்கும் பண்டங்களை யார் உபயோகிப்பது?
அப்ப நமக்கு என்ற சுதேசி இயக்கத்தை திரும்ம ஆரம்பிக்க வேண்டுமா??
இந்த பாணியில் திருச்சியில் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணின் கருத்தை பார்க்க விருப்பமா??அதற்காக அவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளார்கள்,அவர்கள் பள்ளியில்.
இந்த பெண் வேறு யாரும் அல்ல
எனது மனைவியின்
அண்ணன் மகள்.
அவர் எழுதியதை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.