Monday, November 29, 2010

இது சாயுமா?

நேற்று போரூர் பக்கம் போய்விட்டு அப்படியே மனப்பாக்கம் வழியே கட்டுமான பொருட்காட்சி பார்க்க போகலாம் என்று விரைவுச்சாலை உபயோகித்துக்கொண்டிருந்தேன்.



தவறுகளை கண்டுபிடித்தே கண்களுக்கு பழக்கமாகிப்போனதால் இக்கட்டிடம் நின்ற நிலை தடாலடியாக நிற்கவைத்து அப்படியே புகைப்படம் எடுக்க வைத்தது.இப்பதிவை போடுவதற்கு முன்பு ஒரு சந்தேகம்,என்னுடைய கணிப்பு சரியா? போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு படத்தை Zoom செய்த போது ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் வழிந்து கறை உள்ளதை பார்த்தது இதுவும் பைசா கோபுரம் போல் சாய்ந்துகொண்டிருப்பது உறுதியானது. யாராவது தூக்கு குண்டு போட்டுப்பார்த்து தகுந்த அதிகாரிகளிடம் சொன்னால் பொது ஜனத்தை காப்பாற்றலாம்.

படத்தை Zoom செய்து பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

2 comments:

திவாண்ணா said...

சாய்வாகவா இருக்கு? தண்ணி ஏத்தறப்ப நிறுத்த அசிரத்தையா இருக்கிறது பழக்கம்தான். ஏதாவது ஒரு பக்கம் வழியணுமே?

வடுவூர் குமார் said...

திவா
அந்த ஒருபக்க வழிசல் தான் கருப்பாக தெரியுது.