Wednesday, April 30, 2008

வாசல் படி

நான் கட்டுமானத்துறையில் முதன் முதலில் கால் எடுத்து வைத்த வாசல் படி இது தான்.



அட! இடத்தை சொல்ல மறந்திட்டேனா?

இது தான் தாம்பரம் பேருந்து நிலையம்.நேற்று மாலை எடுத்தது

பொது பணித்துறையில் வேலை தொடங்கும் போது இங்கு தான் முதன் முதலில் கால் பதித்தேன்.

Tuesday, April 29, 2008

காவிரி நதி மீது (1)

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....

இப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.

1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற போது இந்த பாலத்தின் முகப்பில் ஏதோ எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை பார்த்த ஞாபகம். என்னவென்று சரியாக்க நினைவில்லை ஆனால் அந்த ஆட்டம் மட்டும் நினைவில் இருக்கிறது.



இன்றைய நிலமைக்கு ஈடுகொடுக்க மற்றொரு மேம்பாலம் தேவை என்று நினைத்த அரசாங்கம் இப்போது புதிய பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,அதை எப்படி செய்கிறார்கள்? என்று பார்ப்போமா...

நிறைய படங்கள் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் சொல்கிறேன்.

இந்த பால Design வெகு எளிமையாக செய்யப்பட்டுள்ளது.

பால எடையை தாங்க Piling செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதன் மீது Foundation போட்டிருக்கிறார்ர்கள்.கீழே உள்ள படம் பார்க்க.



அதன் மீது தூண்...



அந்த தூண் மீது பாலம் வர ஏதுவாக இருக்கும் தாங்கும் Beam.

முதலில் சாரப்பணி தொடங்குகிறது...



கான்கிரீட் போட்டு முடிந்தபிறகு..




வெகு அதிசயமான காட்சி அதற்கு Curing என சொல்லப்படுகிற குளிர்வூட்டும் நிகழ்ச்சி.இதை பெரும்பாளானவர்கள் செய்வதில்லை.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

படம் எடுக்க உதவிய மச்சினருக்கு "நன்றி".

Monday, April 28, 2008

எலுமிச்சை பழம்

திருச்சி போகும் போது கண்ணில் பட்ட காட்சி இது அது.ஓடும் பேருந்தில் இருந்து எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.

பல பதிவர்களின் பெயரும் அகஸ்மாத்தாக படத்தில் விழுந்துவிட்டது. :-))




பார்த்து அனுபவிங்க.முக்கியமாக சக்கரத்தின் முன்னே பார்க்கவும்.

நகர்படத்தில் பார்க்கனுமா?



நன்றி:ஏகாம்பரரெட்டி(நகர்படம்)

Friday, April 25, 2008

வெய்யில்..

சென்னையில் இன்றைய வெய்யில் (சுமார் 11 மணி அளவில்)


நான் தனியாள்.

இவர் தனியாளா?



நேற்று பழவந்தாங்கல் ரயில் நிலய மேடையில் இருந்து எடுத்தது.

Wednesday, April 23, 2008

தோள் காணேன்... (கத்திப்பாரா பாலம்)

15ம் தேதி ஏப்ரல் டைகர் விமானச்சேவை மூலம் சிங்கையில் இருந்து புறப்பட்டேன் சென்னைக்கு.கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பே எடுத்துவிட்டார்கள்.விமானம் முழுவதுமாக நிரம்பவில்லை.இது விழாக்காலம் அல்லது பள்ளி விடுமுறை காலம் இல்லை என்பதால் கூட்டம் நிரம்பி வழியவில்லை போலும்.

ஒவ்வொருவருக்கும் 15 கிலோ எடை என்பதால் வெகு சிலரே அதனை தாண்டி அங்கிருந்தவர்களுடன் பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.என்னுடைய போட்டிகளை டேக் போட்டவுடன் பக்கத்தில் உள்ள கன்வேயர் மூலம் நாமே அனுப்பிவைக்கவேண்டும் அதற்கு ஏதுவாக காலால் அழுத்தி அந்த கன்வேயரை இயக்கும்படி வைத்திருந்தார்கள்.


விமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியிருந்ததால சென்னைக்கு உரிய நேரத்துக்கு 15 நிமிடம் முன்பே தரையிரங்கியது.

இந்திய ரூபாய் இல்லாததால் விமான நிலையத்தில் இருக்கும் பண மாற்று நிலையத்தில் மாற்றி வைத்துக்கொண்டேன்.இங்கு மாற்றுவிகிதம் மிக மிக குறைவு அதனால் தேவைக்கு அதிகமாக இங்கு மாற்றாமல் இருப்பதே நலம்.

As usual... நான் வருவது யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாததால் அங்கிருக்கும் கட்டண ஊர்திக்கு முன்பதிவு செய்துகொண்டேன்.

குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து சென்னையின் அழகை ரசித்துக்கொண்டு வரும் போது திடிரென்று வண்டி ஒரு மேம்பாலத்தின் மீது போனது. ஒவ்வொரு லேன் மார்க்கிங்க்கும் சிகப்பு ஒளி உமிழ்வான் பதித்து அட்டகாசமாக இருந்தது.சாலையின் பக்க தடுப்புச்சுவரில் சுழலும் சிகப்பு ஒளிஉமிழ்வான்களை பயன்படுத்தியிருந்தார்கள்.கையில் உடனடியாக கேமிரா இல்லாத்தால் படம் எடுக்கமுடியவில்லை.பிறகு தான் புரிந்தது அது சமீபத்தில் திறந்த "கத்திப்பாரா" மேம்பாலம் என்று.

இப்படி பார்த்துக்கொண்டு வரும் போதே ஏதோ ஒன்று சரியில்லாததை உள்ளுணர்வு உணர்த்தியை என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கும் போதே சடாரென்று புரிந்தது.

அது என்ன?

கீழே உள்ள படத்தை பாருங்கள்.இது சிங்கப்பூரின் விரைவுச்சாலையில் ஒரு பகுதி.



இதில் முக்கியமான ஒரு பகுதி... சாலையில் இரு பக்கங்களிலும் இருக்கும் "தோள்" என்ற Shoulder பகுதியாகும்.இதை அவசரகாலத்திலும் மற்றும் வாகனங்களை பழுதுபார்பதற்காகவும் தேவைப்படும் பகுதி அது.சாதாரண போக்குவரத்து நேரங்களில் இதை உபயோகப்படுத்துவது குற்றமாகும்.

சரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.

அப்போது எடுத்த சில படங்கள் கீழே....


பாருங்கள் அந்த "தோள்" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்!!

ஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.

பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.

இது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.



தோள் எங்கே????

கீழே உள்ள படங்கள் கிண்டி பக்கம் வரவிருக்கும் மேம்பால இணைப்புகள்..






கைப்பிடி பகுதியில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பாருங்கள். கீழே ஏதோ பற்றவைப்பு வேலைகள் நடைபெருகின்றன போலும்...

கீழே உள்ள படம்,விமான நிலயைத்தை நோக்கி உள்ள சாலை மற்ற சாலையுடன் இணையும் இடம். அம்புக்குறி மற்றும் அறிவிப்பு விளக்குகள் இல்லாவிட்டால் விபத்து நடக்க மிகச்சிறந்த இடமாக ஆகக்கூடிய வாய்ப்புள்ளது.



இதைப்போல் வழித்தடங்களுக்கு மத்தியில் தேவையான தடுப்பு வேலிகள் இருக்க வேண்டும்,அதுவும் இங்கு இல்லை.தறிகெட்டு ஓடும் வாகனங்கள் எதிர் திசையில் செல்லாமல் தடுக்கவும் இது உதவும்.

இன்றைய செய்தியில் மேலும் சில பால வேலைகள் முடியும் நாட்களை கொடுத்துள்ளார்கள்,அப்படியே இந்த மாதிரி விஷயங்களையும் பார்த்து கவனத்தில் கொண்டால் நல்லது.

லக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

Sunday, April 20, 2008

நடத்துனர் எச்சில் நமக்கில்லை

1980 களில் சென்னை வந்த புதிதில் பல பஸ்களில் பயணம் செய்யும் போது நடத்துனர்களின் இந்த எச்சில் பழக்கம் வெகுவாகவே என்னை கஷ்டப்படுத்தும்.அந்த மாதிரி சமயங்களிலும் ஓரிரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் கைவிரலில் ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு அதன் மேல் பகுதியில் சின்ன ஈர பஞ்ஜை வைத்துக்கொண்டு அதனை தொட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுப்பார். அப்போது அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை பலர் உபயோகப்படுத்தவில்லை என்பது தான் நிஜம்.

ஒரு பழைய நண்பனை ஆர்குட் மூலம் கண்டுபிடித்து நேற்று அவனை திருவள்ளூரில் சந்திப்பதாக தொலைபேசி முடிவுசெய்துகொண்டேன்.அவனும் நான் இருக்கும் இடத்தில் இருந்து போரூருக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து திருவள்ளூர் வரச்சொல்லியிருந்தான்.
நான் ரயிலில் போகலாம் என்றிருந்தேன்,இது குறுக்கு வழியாக இருக்கும் போல் தோனியதால் சுமார் 2.30 மணிக்கு கிளம்பினோம். மதிய வெய்யில் வத்திக்குச்சி இல்லாமலே பற்றிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.புதிதாக வாங்கிய ரேபான் கிளாஸ் கண்ணை காப்பாற்றி தலைவலியில் இருந்து தப்பிக்கவைத்தது.

ஆவிச்சி பள்ளியில் இருந்து போரூருக்கு Share Auto மூலம் 8+8 ரூபாய்க்கு போய் சேர்ந்தோம்.

போன சிறிது நேரத்திலேயே தி.நகர் to திருவள்ளூர் செல்லும் அரசு விரைவுப்பேருந்து தாழ்வு தள அமைப்புடன் வந்திருந்தது.உள்ளே நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சுத்தமாக இருந்தது.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



பயணச்சீட்டு கொடுக்கும் முறையும் எச்சில் பண்ணவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு ஒரு சின்ன இயந்திரம் நடத்துனர்களின் கையில்.செல்லும் இடம் சொல்லப்பட்டவுடன் பித்தானை அமுக்கி கீழே உள்ள மாதிரி பயணச்சீட்டு கொடுக்கிறார்.அந்த இயந்திரம் அவ்வளவு பெரிதாக இருக்கவேண்டுமா? என்று தோனியது.




சுமார் ஒரு மணி நேரத்தில் திருவள்ளூர் அடைந்தது.போனவுடன் நண்பனுக்கு தொலைப்பேசி இருக்கும் இடத்தை சொன்னவுடன் ஒரு வண்டி அனுப்பி எங்களை அவன் இடத்துக்கு அழைத்துப்போனான். சந்தித்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திப்பது சந்தோஷமாக இருந்தது.அவன் மூலம் மேலும் பல நண்பர்களின் மினஞ்சல் முகவரிகள் கிடைத்தது.

சிறிது நேரம் பேசிக்கொண்ட பிறகு அங்கிருக்கும் சில கோவில்களுக்கும் போகலாம் என்று கிளம்பினோம்.முதலில் வீரராகவ பெருமாள் கோவில்.

நாங்கள் போனபோது உஸ்தவரின் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதன் படங்கள் கீழே..








அதன் பிறகு புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு போனோம்.இங்கு ஒரு பெரிய புற்று தான் தெய்வ உருவில் இருக்கு.பலர், பூ மேல் இருக்கும் எலுமிச்சையை முந்தானையில் வாங்கிக்கொள்கிறார்கள். என்ன ஐதீகம் என்று தெரியவில்லை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் வீடு திரும்ப நேரிட்டது.

Friday, April 18, 2008

சென்னை - புதிய முகம்

நாளுக்கு நாள் சென்னையின் முகம் மாறிக்கொண்டு வருகிறது.

நேற்று மின்வண்டி எடுக்கும் நேரத்தில் ஒரு ஓரத்தில் இந்த மாதிரி ஒன்றை நிறுத்திவைத்திருந்தார்கள்,என்ன ஏது என்று பார்க்கும் வரை அதன் பக்கம் மனித சஞ்சாரமே இல்லை.

ஆதாவது வரிசை பிடித்து நிற்காமல் ஸ்மார்ட் கார்ட் கொண்டு பயணச்சீட்டு வாங்க வைத்துள்ளார்களாம்.அதிலும் ஏதோ குளருபடிகள் நிகழ்வதால் அந்த பக்கம் மக்கள் கூட்டமே இல்லை.




அதிலும் ஆறுதலான விசேஷம் என்னவென்றால்... தமிழ் பரவலாகப்பட்டிருப்பது தான்.

Thursday, April 17, 2008

தி.நகர் அபாயம்!!

இன்று மதியம் தி.நகர் பக்கம் போக வேண்டிய வேலை வந்தது.பழவந்தாங்களில் இருந்து மின் வண்டி மூலம் மாம்பலம் வந்துசேர்ந்தேன்.மாடிப்படி மூலம் கீழிறங்கி ரங்கநாதன் சாலையில் கால வைத்தவுடன் காண நேர்ந்த காட்சி தான் கீழே உள்ள படங்கள்.



கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.



இந்த படங்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு சத்தம்,திரும்பினால் நான் எதிர்பார்த்தது போல் ஒருவர் நடந்துகொண்டு இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கால் இடறி விழ,நீட்டிக்கொண்டு இருந்த கம்பி கையை பதம் பார்க்க ரத்தத்தை சுவைத்தது.பக்கத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் கை கொடுக்க சிறிது நேரத்தில் ஒன்றும் நடக்காது போல் மக்கள் வெள்ளம் நடந்துகொண்டு இருந்தது.

இன்னும் எவ்வளவு மக்கள் ரத்தத்தை சுவைக்க காத்திருக்கோ!!!

இது இப்படிப்பட்ட கொடுமை என்றால் உஸ்மான் சாலை பக்கம், பால வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இதை விட மோசமான நிலமை.இங்கும் நமக்கு தெரியாமல் தினம் தினம் விபத்து நடக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைந்த இடம்.

Sunday, April 13, 2008

உருட்டுச் சக்கரம்

இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.

30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.

நல்ல கால நிலையில் இந்தோனேஷியாவையும் மலேசியாவின் தென்கோடி முனையையும் காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

மீதியை அவர்கள் சொல்கிறார்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

மொழி சாகுமா?

ஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா?
அப்படி என்றால் எப்படி சாகும்?

அதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.

கீழே உள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.

வரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக் கொண்டாடங்களின் ஒரு பகுதி இது.

பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

Friday, April 11, 2008

வீணை நாதம்

காட்சிக்கு வைக்கும் வீணைதான் என்றாலும் மீட்டும் போது நம்மையும் சேர்த்து மீட்டுது.

மீதி அதை மீட்டுபவரே சொல்கிறார்,பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

நெகிழி ஆட்டம்

நெகிழி அதாங்க பிளாஸ்டிக்கை வைத்து யார் யாரோ என்னென்னோவோ செய்யும் வேலைகளில் இது வித்தியாசமாக இருக்கு பாருங்க.

கீழே ஓடும் ரயிலின் மூலம் வெளியேற்றப்படும் காற்றை வைத்து ஒரு ஆட்டம் போடுவதை கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.




நன்றி:வசந்தம் சென்ரல்

Tuesday, April 08, 2008

திருக்கல்யாணம்

திருப்பதி போய் திருக்கல்யாணத்தை தரிசிக்கமுடியாதவர்களுக்காக,வெங்கடாஜலபதி நகைகளை திருப்பதியில் இருந்து எடுத்துவந்து சென்னையில் கல்யாணம் செய்துவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

அங்கு பார்க்க முடியாதவர்களுக்காக...

கீழே உள்ளது சலனப்படம்.





நன்றி: வசந்தம் சென்ரல்.

தேவையா! இது?

ஏம்பா கண்ணுங்களா? இதெல்லாம் அதுவும் வெளிநாட்டுக்கு வந்து இப்படி செய்யலாமா?
உடனே உள்நாட்டில் செய்யலாமா? என்று கேட்காதீர்கள்.
நீங்கள் மட்டுமில்லாமல் தனது மனைவியையும் உடன்படுத்தி அவர்களுக்கு இரண்டு வார சிறைத்தண்டனை வேறு.படிச்சி நேர்மையாக வாங்க வந்து நிம்மதியாக வாழுங்களேன்,இதனால் மற்றவர்கள் மேலும் இன்னும் அழுத்தமாக சந்தேக பார்வை விழ இவர்களும் ஒரு காரணமாகக்கூடும்.
கொடுமையப்பா!!!
மீதி கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

மிதிவண்டி டியூப்

இதில் காணப்பட்டுள்ள அனைத்து படங்களும் நண்பர் மூலம் மின் அஞ்சலில் வந்தது.

பதிவு கொஞ்சம் பெரிதாக இருக்கும்.(படமாக போடலாம் என்றிருந்தேன்)

வண்டி வந்திடுச்சி..

மீதி கிழே






கையினால் பயனில்லை என்றாலும் இவரின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது.

Monday, April 07, 2008

தமிழ் பேசும் அமைச்சர்

போன 5ம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் தமிழுக்காக விழா ஒன்று நடந்துவருகிறது,அது 27ம் தேதிவரை நடக்க இருக்கிறது.

நேற்று நடந்த இந்த விழாவில் இங்குள்ள தொழிற்துறை அமைச்சர் பேசும் அழகான தமிழை கேளுங்கள்.போன வருடத்தில் இவர் இப்படி பேச மிகவும் கஷ்டப்பட்டார்.பிரத்யோக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் போலும்,அசத்துகிறார்.

பாருங்கள்.


வாழ்த்துக்கள்: தொழிற்துறை அமைச்சர் திரு ஈஸ்வரன்.



நன்றி:வசந்தம் சென்ரல்

ஹொகேனெக்கல்

இப்போது ஓரளவு சூடு குறைந்த பிரச்சனையை இரண்டு நாட்களுக்கு முன்பு இங்குள்ள செய்தியில் சொன்னபோது எடுத்தது.

நேரிடையாக பார்க்கமுடியாதவர்களுக்கு சமர்ப்பனம்.



நன்றி:வசந்தம் சென்ரல்

பரிணாம வளர்ச்சி???!!

பார்க்க பார்க்க சும்ம்மா ஜிவ் என்று ஏறுது..

இது தானா? பரிணாம வளர்ச்சி என்பது?

நாம் காணும் முதல் வளர்ச்சி??



பார்த்து மகிழுங்கள்.

Sunday, April 06, 2008

சதுரகிரி

சந்திரபுரியில் கோரக்க சித்தர்

போன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்று தான் எடுத்துவந்தேன்.

இதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79 வயதுக்காரர் என்று.

இந்த ஊர் "வத்திராய்பு" என்ற ஊருக்கு பக்கத்தில் இருக்கிறதாம்.நம்மில் சில பதிவர்கள் இந்தூரில் இருந்து வந்தவர்கள்.

இந்நூலில் ஒரு பகுதியில் வானில் பறப்பது எப்படி என்று சொல்லியிருப்பதை படிக்கும் போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சித்தர் வானில் பறந்தார் என்ற வீடியோ நினைப்புக்கு வந்தது.அந்த வீடியோ பார்த்தபோது எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது,இப்படியெல்லாம் நடக்குமா? என்று.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



அது மட்டுமா? மறைந்து போவது எப்படி இன்று கீழே பாருங்கள்..



இந்த நூலில் பல வகையான மருந்துகள் மற்றும் மூலிகைகள் என்று பழைய நூல்களில் இருந்து எடுத்துப்போட்டு அசத்தியிருக்கார்




முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்.